தெலுங்கானாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையின் உடலை தெருநாய்கள் தின்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் குழந்தையின் கதி என்ன ஆனது என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மூனம்கொண்டாவில் மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பி[ரசவ வார்டும் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள். பெண்கள் என கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வாரங்கலில் உள்ள முக்கிய ஆஸ்பத்திரிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் நேற்று மகாத்மா காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தின் ஒரு ஓரத்தில் தெருநாய்கள் சேர்ந்து ஏதோ ஒன்றை கடித்து குதறியபடி இருந்தன. இதை அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவார் பார்த்தார்.
பாதி உடலை தெருநாய்கள் தின்றன
உடனே சந்தேகம் அடைந்த அவர் தெருநாய்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு அந்த நாய்கள் சேர்ந்து பச்சிளம் குழந்தை ஒன்றை கடித்து குதறியது தொpந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் உடனடியாக தெருநாய்களை விரட் முயன்றார். எனினும் தெருநாய்கள் அந்த குழந்தையை தொடர்ந்து கவ்வி கடித்தன. இதில் குழந்தையின் வயிற்றுக்குள் கீழ் உள்ள உறுப்புகளை அவை தின்றது தெரிந்தது.
ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?
எனினும் போலீஸ்காரர் நீண்ட நேரம் போராடி தெருநாய்களை அங்கிருந்து விரட்டினார். பின்னர் அந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த குழந்தையின் பாதி உடலை தெருநாய்கள் தின்றதால் . அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை கண்டறிய முடியவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் மத்வாடா போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் முரளி ஆகியோர் வந்து பா