யாருங்க அந்த கம்மின்ஸ்? ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டுக்கு நேர்ந்த கதி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் யூட்யூபர் ஒருவர் பொதுமக்களிடம் 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குறித்தும், அந்த போட்டியில் அதிரடியாக சதம் அடித்த டிராவிஸ் ஹெட் பெயர்களை கூறி, இவர்களை உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய போது யாருக்குமே அவர்கள் யார் என்று தெரியவில்லை. இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
IPL EXCLUSIVE -சிஎஸ்கேக்கு ரிஷப் பண்ட் செல்ல மாட்டார்.. டெல்லி அணியில் தொடர போகிறார்.. கங்குலி உறுதி உலகிலேயே கிரிக்கெட் விளையாட்டில் அதிக வெறி கொண்டு ஆடும் அணி என்ற பெயரை ஆஸ்திரேலியா பெற்று இருக்கிறது. உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் அணியாக இந்தியா உள்ளது. ஆனால், கிரிக்கெட்டில் அதிக உலகக் கோப்பை வெற்றிகளை பெற்ற அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பைகளை வென்று இருந்தது. குட் நியூஸ்.. பிசிசிஐ தந்த சர்ப்ரைஸ்.. விரைவில் வரப் போகும் நட்சத்திர கிரிக்கெட் தொடர் அந்த இரண்டு தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை வெற்றிகரமாக வழிநடத்தி சென்றவர் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். அந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதம் அடித்து, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதை அடுத்து அவர்கள் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருப்பார்கள் என்ற பிம்பம் உள்ளது. ஆனால், உண்மையில் ஆஸ்திரேலியாவில் பலருக்கும் அவர்கள் யார் என்று தெரியாத நிலையே உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய யூட்யூபர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் பாட் கம்மின்ஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ட்ராவிஸ் ஹெட் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவில் இடம் பெற்ற பலருக்கும் அவர்கள் யார் என்று தெரியவில்லை. சிஎஸ்கே தம்பினா சும்மாவா.. கடைசி பந்து வரை திக்திக்.. கம்மின்ஸ் கொடுத்த அதிர்ச்சி.. யாருக்கு வெற்றி? மேலும், ஒருவர், “கிரிக்கெட்டில் பிரெட்லீ மட்டும் தான் எனக்கு தெரியும்.” என்றார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவரிடமும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அவர், “எனக்கு கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டுமே தெரியும்” என்றார். இதை அடுத்து ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டுக்கான ஆர்வம் குறைந்து விட்டது என்பது தெரிய வந்துள்ளது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு அங்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.