ஒலிம்பிக் – ஹாக்கி:

இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த கோல் கீப்பராக விளங்கிய கேரளாவை சேர்ந்த பி ஆர் ஸ்ரீஜெஸ் தற்போது சர்வதேச ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். தன்னுடைய கடைசி ஆட்டத்தை இன்று விளையாடிய ஸ்ரீஜேஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஸ்ரீஜேஸ் உலகின் சிறந்த கோல் கீப்பர் என்ற விருதை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் வெற்றி பெற்ற பிறகு பேசிய பி ஆர் ஸ்ரீஜேஸ் முதலில் இந்த பதக்கம் வென்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் வெறுங்கையோடு இம்முறை நாடு திரும்பவில்லை. இந்த பதக்கத்தை வெல்வதற்காக நாங்கள் கடுமையாக போராடினோம். இது என்னுடைய கடைசி போட்டி என்பதால் என்னை வெற்றியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டி எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நான் ஓய்வு பெற வேண்டும் என்பது நான் எடுத்த கடினமாக முடிவாக கருதுகின்றேன். ஓய்வு பெறும் முடிவு என்பதை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும் அதை நான் செய்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன். ரசிகர்கள் என்னை மீண்டும் விளையாடுகிறார்களா என கேட்கிறார்கள். உங்களுடைய அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். 2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் சிறந்ததா இல்லை? பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம் சிறந்ததா என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்றது தான் சிறந்தது என நினைக்கின்றேன். ஏனென்றால் அதில் வெற்றி பெற்றதன் மூலம் தான் எங்களால் உலக அளவில் ஹாக்கியில் சிறந்து விளையாட முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது. அந்த நம்பிக்கையின் மூலம் தான் நாங்கள் அடுத்தடுத்து அபாரமாக விளையாடி தற்போது சாதித்து இருக்கிறோம். ஒலிம்பிக் வரலாற்றில் 13வது பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி! எந்த அணியும் படைக்காத மாபெரும் சாதனை அரையிறுதியில் வெற்றி பெற்று தங்கம் அல்லது வெள்ளி வெல்ல வேண்டிய உத்வேகத்தில் தான் இருந்தோம். ஆனால் வெண்கல பதக்கம் கிடைத்து இருப்பதும் மகிழ்ச்சி தான் எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய அணி வீரர்களுக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என பிஆர் ஸ்ரீஜேஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே, அவருடைய மனைவி அனுஷ்யா தெரிவிக்கையில், என் கணவர் கடைசி போட்டியில் பதக்கம் வென்று இருப்பதை வார்த்தையால் என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை. அவருடைய உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாக தான் நான் இந்த பதக்கத்தை கருதுகிறேன் என்று கூறியுள்ளார். பி ஆர் ஸ்ரீஜேஸ் விளையாடிய போட்டியை அவர்களுடைய உறவினர்கள் வீட்டில் அமர்ந்து தேசியக்கொடியுடன் பார்த்தார்கள். இந்தியா வெற்றி பெற்ற பிறகு வீட்டில் பட்டாசு வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *