ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்…

japan
Japan earthquake

ஜப்பான் நாட்டில் இன்று காலையில் ரிக்டர் அளவில் 7.1 என நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் கண்காணிப்பு குழு கூறி உள்ளது.

சுனாமி எச்சரிக்கை

மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பல ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில்
ஜப்பானின் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை நேரத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்நாட்டின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு குழு கூறுகையில், ஜப்பானில் இன்று காலையில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது, அதாவது ரிக்டர் அளவுபடி இது சுனாமி உருவாகும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவீடு ஆகும். இதற்கு இடையே ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதிகளில் சுமார் 1 மீட்டருக்கும் மேல் உயரமான அலைகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள்
ஏதும் பதிவாகவில்லை. அதேசமயம் நிலநடுக்கம் நடைபெற்ற பகுதியை பேரிடர் குழு கண்காணித்து வருகிறது.
2 முறை நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கியுசு பகுதியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6. 9 அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதனை தொடர்ந்து 7.1 என்ற கணக்கில் ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது.

வாகனங்கள் அதிர்வு
நிலநடுக்கத்தின் போது நகரத்தில் இருந்த குடியிருப்புகள் அதிர்வை உணர்ந்தன. வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. மேலும் மேம்பாலத்தில் சென்ற வாகனங்கள் வரிசையாக
நிறுத்தப்பட்ட நிலையில் நிலநடுக்கத்தால் வாகனங்கள் அனைத்தும் அதிர்த்து போகின. ஜப்பானின் கியுசி. மியசகி பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் வலிமை மிகுந்ததாக உள்ளதால் சுனாமி ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

20 செண்டி மீட்டர்

ஏற்கனவே கியுசி பகுதிகளில் 20 செண்டி மீட்டர் அளவுக்கு சுனாமி பதிவாகி இருந்தது. இயற்கை சீற்றங்களில் சிக்கி தவித்து வரும் ஜப்பான் தற்போது நிலநடுக்கத்தை சந்தித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் பீதி
அடைந்துள்ளனர். பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *