வெள்ளிப் பதக்கம் கொடுத்தால்…

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட். அவர் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 13 (இன்று) இரவு 9.30 மணிக்கு வழங்கப்பட உள்ளது. தான் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்த நிலையில் தனக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும் என இந்த வழக்கில் கேட்டிருந்தார் வினேஷ் போகட். அது குறித்த விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் நீதிமன்றம் இறுதியாக வினேஷ் போகட்-இடம் இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளது. அவர் அளிக்கும் பதிலை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த இரண்டு கேள்விகளில் ஒரு கேள்வி வில்லங்கமாகவும் இருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்ப்போம். 50 கிலோ எடை பிரிவு மகளிர் மல்யுத்தத்தின் இறுதிப் போட்டி நாள் அன்று வினேஷ் போகட்டின் எடை சரிபார்க்கப்பட்டது. 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்கும் ஒருவரது எடை 50 கிலோவுக்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்தார் வினேஷ் போகட். அதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இரண்டு நாட்களும் எடை சரி பார்க்க வேண்டும் என்ற நடைமுறை வினேஷ் போகட்டுக்கு தெரியுமா? என நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதற்கு வினேஷ் எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள சம்மதமா? எனவும் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்றம் வினேஷ் போகட்டுக்கு வெள்ளி பதக்கத்தை அளிக்கப் போவது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றம் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். ஏனெனில், இரண்டாவது நாளும் எடை சரிபார்க்கப்படும் என்பது வினேஷ் போகட்டுக்கு தெரியுமா? என நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதற்கு என்ன மாதிரியான பதில் அளித்தாலும் அதை வைத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க முடியாது என நீதிமன்றம் முடிவு எடுக்க முடியும். Vinesh Phogat முதுகில் குத்திய PT உஷா! தீர்ப்பு நெருங்கும் நேரத்தில் அடித்த பல்டி.. பதக்கம் போச்சு எடை சரிபார்ப்பு குறித்து தெரியும் என பதில் அளித்தால் தெரிந்து கொண்டே எப்படி கூடுதல் எடையுடன் இருந்தீர்கள்? என நீதிமன்றம் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க மறுக்கலாம். அதே போல, எடை சரி பார்ப்பது குறித்து தெரியாது என பதில் அளித்தால் விதிமுறைகளை முழுமையாக அறியாமல் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றதால் வெள்ளிப் பதக்கம் அளிக்க முடியாது எனவும் நீதிமன்றம் கூறலாம். எனவே, இந்த வில்லங்கமான கேள்விக்கு வினேஷ் போகட் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சாதுர்யமான பதிலை அளித்தால் மட்டுமே வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *