Rtn. கலைச்செல்வி, அழகுக் கலை நிபுணர்.
வெள்ளாரிக்காய் …கோடை காலத்தில் தாகத்தை தணிப்பது போல், பல நன்மைகளை உடலுக்குச் செய்கிறது.
விட்டமின் சி அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது.
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் ஒரே மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிசயத் தக்கவை
வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது.
வெள்ளரிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது.
இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும்.
இந்த ஜூஸ் பல்வேறு நோய்களை சரிசெய்யக்கூடியவை
கூந்தல் சருமம் மற்றும் நகங்களின் அழகை அதிகமாக்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், ஒரு மாதத்தில் மேனி மெருகேறும்.
கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்யும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
வெள்ளரிக்காயில் உள்ள சிலிகான் என்ற மினரல் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கும். இதனால் சருமம் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும்.
நம் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பு செல்களே பல பாதிப்புகளைத் தரும்.
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸினை குடித்து வந்தால், எளிதில் கழிவுகள் வெளியேறும். கொழுப்புகள் கரையும்.
வெள்ளரிக்காயுடன் எந்த வகையான காய் மற்றும் பழங்கள் சேர்த்து உணவில் எடுத்துக் கொள்ளலாம். அல்லது பழச்சாறாகவும் குடிக்கலாம்.
வீங்கிய கண்களுக்கு தீர்வு
கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மற்றும் வீக்கத்திற்கு வெள்ளரி நல்ல நிவரணம் அளிக்கிறது. வீங்கிய கண்களுக்கு மட்டுமல்ல வறண்ட, சிவந்த மற்றும் சோர்வாக தோற்றமளிக்கும் கண்களுக்கும் வெள்ளரியைப் பயன்படுத்தலாம். வெள்ளரியை மெலிதாக ஸ்லைஸ் செய்து இரு கண்களுக்கு மேல் மற்றும் கண்களுக்கு கீழ் சிறிது நேரம் வைப்பது கண்களை புத்துணர்ச்சியாக வைக்கும
இயற்கையான டோனர்: வெள்ளரியை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெள்ளரி டோனர் சேதமடைந்த சருமத்திற்கு உதவுகிறது, சருமத்தின் மீது குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது. சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக வெள்ளரி டோனரை சருமத்தில் பயன்படுத்தலாம்.
முன்கூட்டியே வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது வெள்ளரி சரும சுருக்கங்களை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் கலவைகளை கொண்டுள்ளது. இது ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. வைட்டமின் சி புதிய செல் வளர்ச்சியை எளிதாக்குகிறது.
சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் அதிக மாசுபாடு உள்ளிட்டவை நமது சருமத்தின் செல்லுலார் அமைப்பில் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வெள்ளரியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீரேடிக்கல்ஸ் விளைவுகளை திறம்பட குணப்படுத்துகின்றன.