சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இலவசக் கல்வி திட்டத்துக்கு’ unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.