வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு:

பிரதமர் மோடி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டரில் பயணித்தப்படி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார்.

PM Modi

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பலத்த மழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கனோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியை பார்வையிட பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில ஆளுநர் ஆரிப் கான் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியை பார்வையிட்டனர்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை பிரதமர் மோடியிடம் விளக்குகிறார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *