வெள்ளிக்கிழமையில் இரவு நேரத்தில் வரும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வழிபடும் போது அதன் பலன்கள் மிகவும் அதிகமாக கிடைக்கும். வெள்ளிக்கிழமை இரவு நேர சுக்கிர ஓரை என்பது மகாலட்சுமியின் சக்திகள் ஒடுங்கி, உறங்கச் செல்லும் நேரமாகும். இந்த நேரத்தில் நாம் மனதார வேண்டி என்ன கேட்டாளும் அம்பாள் அருள்வாள் என்பது நம்பிக்கை.
ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமை இந்த ஆண்டு பஞ்சமி திதியுடன் வருகிறது. பொதுவாக கார்த்திகை மாதத்தில் தான் பஞ்சமி திதி, வெள்ளிக்கிழமையில் வரும். ஆனால் இந்த முறை ஆடி மாதத்தில் வந்துள்ளது கூடுதல் சிறப்பானதாகும். இந்த நாளில் மகாலட்சுமியின் மனம் மகிழும் படி வீட்டில் வழிபட்டால், மகாலட்சுமி நிரந்தரமாக நம்முடைய வீட்டில் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளியில் வரும் பஞ்சமி :
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளுமே ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பை பெற்றவை தான். சுக்கிரனுக்கும், மகாலட்சுமிக்கும் உரிய வெள்ளிக்கிழமை, எப்போதுமே ஒரு குறிப்பிட்ட திதி அல்லது நட்சத்திரத்துடன் இணைந்து வரும் போது அது மிக அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு வரக் கூடிய ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியுடன் இணைந்து வருகிறது. பொதுவாக பஞ்சமி என்றாலே அனைவரும் வாராகி அம்மன் வழிபாட்டினை தான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் வெள்ளிக்கிழமையில் பஞ்சமி இணைந்து வருவதும், அதிலும் வளர்பிறை பஞ்சமி வெள்ளிக்கிழமையில் வருவதும் மிகவும் ஆற்றல் மிக்க நாளாகும்.
ஸ்ரீபஞ்சமி வழிபாடு :
எந்த மாதத்தில் வளர்பிறை பஞ்சமி, வெள்ளிக்கிழமையில் வந்தாலும் அதை ஸ்ரீபஞ்சமி என்பார்கள். இது மகாலட்சுமிக்குமிக்கு உரிய மிக அற்புதமான நாளாகும். இந்த நாள் ஆடி வெள்ளியுடன் இணைந்து வருவதால் ஒரு குறிப்பிட்ட முறையில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ நிலை என்பது உயரும். நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமையும். கொடுத்த கடன் திரும்ப வரவில்லை, கட்டுப்படுத்த முடியாத கோபம் வருகிறது. மனதில் அமைதி இல்லாமல் இருக்கிறது, செல்வ நிலை உயருவதில் தடை உள்ளது. நோய், கடன் சுமை போன்ற கர்மாவில் இருந்து மீள முடியாமல் இருப்பவர்கள், எந்த காரியத்தை செய்தாலும் அதிலும் தடை வருகிறது என்கிறவர்கள் ஆடி மாத நான்காவது வெள்ளியில் இந்த குறிப்பிட்ட வழிபாட்டினை செய்தால் மகாலட்சுமி எப்போதும் உங்களுடன் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
செல்வ சேர மகாலட்சுமி வழிபாடு :
ஆடி 4வது வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல், மகாலட்சுமிக்கு மல்லிகை போன்ற வாசனை மலர்கள் சூட்டி அலங்காரம் செய்து, குங்குமப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக பால் பாயசம், க