விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது சீனாவில் இருந்து வரும் சிகார் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த தீப்பெட்டி உற்பத்தியில் பணிபுரியும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற சீனாவின் சிகார் லைட்டர்களையும் அதன் உதிரி பாகங்கள் இந்தியாவிற்குள் வருவதையும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.