தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி தம் இளம் வயதிலேயே தொடங்கி நடத்தி வந்த பத்திரிக்கை முரசொலி ஆகும். திமுகவைச் சேர்ந்த பலர் அந்த காலகட்டத்தில் பல பத்திரிக்கைகளை நடத்தி வந்தனர். திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பின்னர் முரசொலி என்பது திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் ஆனது.
கட்சியின் தொண்டர்களுடன் இந்த பத்திரிக்கை மூலம் பல ஆண்டுகளாக உரையாடி வந்தார். தனது மூத்த மகன் என முரசொலி நாளிதழையே கலைஞர் கருணாநிதி குறிப்பிடுவார். ஆகஸ்ட் 10 என்பது முரசொலி முதல் பிரதி (1942) வெளிவந்த நாள். அதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வாழ்த்துக் கடிதம்.
இந்த வாழ்த்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நாம் அனைவரும் முத்தமிழறிஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலிக்குத் தெரிவிக்கின்ற வாழ்த்தாகும். ஆகஸ்ட் 10, நம் கொள்கை ஆயுதமாகத் திகழும் முரசொலியின் பிறந்தநாள்.பள்ளி மாணவனாக இருந்த காலத்திலயே தன் சிந்தனைத் தீப்பொறிகளை எழுதுகோல் தூரிகையால் எழுத்தோவியமாக்கி ‘மாணவநேசன்‘ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், பள்ளி இறுதித் தேர்வு முடித்து, தனது 18 வயதில் 10-8-1942-இல் முரசொலி எனும் அச்சிடப்பட்ட இதழைத் தொடங்கி அதில் ‘சேரன்‘ என்ற பெயரில் சிந்தனையைத் தூண்டும் படைப்புகளை வழங்கி வந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படுகிற வெள்ளையனே வெளியேறு இயக்கம் உத்தமர் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில், அதே 1942 ஆகஸ்ட் மாதம் 10-ஆம் நாளன்று, காலங்காலமாக இந்த சமுதாயத்தில் நிலவி வந்த அடிமைத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் வெளியேற்றி சுயமரியாதையும் பகுத்தறிவும் மிக்க, மானமும் அறிவும் நிறைந்த, இன உணர்வுமிக்கதாகத் தமிழ்ச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன்