நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதுதான் சமூக நீதியா? என திமுக அரசு மீது டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சியின் இராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தற்காலிக துப்புறவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. மிகவும் நெருக்கடியாக காலத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.