நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் அடையும்போது அவை சர்க்கரையாக மாற்றப்படுகிறது. சர்க்கரையாக மாற்றப்பட்ட இந்த உணவுகள் இரத்தத்தில் கலக்கிறது. இதுவே நமது உடலில் ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. இன்சுலின் உற்பத்தி குறைவாக உள்ள போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரகம், இதயம், கண்கள் போன்ற உறுப்புகள் சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகம். காலையில் அதிக அளவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து இருப்பதற்கான காரணங்கள் .
சர்க்கரை அளவை அதிகரிக்கும் மன அழுத்த பிரச்சனைகள்!
காலை நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. கார்டிசோல் எனப்படும் ஹார்மோன் காலை நேரங்களில் அதிகமாக செயல்படும். கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நமது உடலில் ஆற்றலை தக்க வைக்ககார்டிசோல் ஹார்மோன்கள் உதவுகின்றன. இருப்பினும் கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தமாக இருக்கும் போது இந்த கார்டிசோல் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.