ரஜினியின் ‘கூலி’க்கு இளையராஜா செக் வைத்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதில், தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்று அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெடு விதித்துள்ளார்.
அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.