கார் பந்தயத்துக்கு எதிராக அதிமுக வழக்கு!

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

Chennai car race

சென்னையில் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி பார்முலா நான்கு கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிதி விவகாரம், கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகள் போன்ற அம்சங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி கார்பந்தயம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தை கார் பந்தயத்திற்கு தடை வாங்க அதிமுக முடிவு செய்துள்ளது. மேலும் அவரச வழக்காக பட்டியலிடுமாறு அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *