கள்ளச்சாராய விவகாரம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்ற கண்ணுகுட்டி, இவரது மனைவி விஜயா சகோதரர் தாமோதரன் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *