கருட பஞ்சமி மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தியில் நாகங்களும், அதற்கு அடுத்த நாளான பஞ்சமியில் கருடனும் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதனால் நாகங்கள் அவதரித்த நாளை நாக சதுர்த்தி என்றும், கருடன் அவதரித்த தினத்தை கருட பஞ்சமி என்றும் கொண்டாடுகிறோம். கருட பஞ்சமி அன்றும் நாகங்களை வழிபடும் வழக்கம் உள்ளது. இந்த நாளை நாக பஞ்சமி என்றும் அழைப்பதுண்டு.
கருட பஞ்சமி இந்த ஆண்டு ஆகஸ்ட் 09ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கருட வழிபாடும், கெளரி வழிபாடும் மிகவம் சிறப்புக்குரியதாகும். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ஆடி 4வது வெள்ளிக்கிழமையுடன் இணைந்து கருட பஞ்சமி அமைந்துள்ளது. இந்த நாளில் கருடனை வழிபட்டால் நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் சிறக்கும்.
கருட பஞ்சமி :
இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி காக்கும் கடவுளாக இருக்கக் கூடியவர் மகாவிஷ்ணு. தூணிலும், துரும்பிலும் இருந்து பக்தர்களை காக்க ஓடோடி வரும் மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். பெருமாள் கொண்ட அளவு கடந்த பக்தியின் காரணமாக கருடன், ஆழ்வார்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பெருமாள் கோவில்களில் முதலில் கருடனை வணங்கி, ஆசி பெற்ற பிறகே, பெருமாளை வழிபட வேண்டும். ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி திதி, கருடனின் வழிபாட்டிற்குரிய கருட பஞ்சமி என அழைக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை, சூரியனின் தேரோட்டியான அருணனுக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். வினதையின் மகனாக கருடன் அவதரித்தது ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில். இவர் விஷ்ணுவின் அம்சமாகவும்,