அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
Yield Engineering Systems ரூ.150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 300 வேலைவாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன.
PayPal நிறுவனத்துடன் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
Microchip நிறுவனத்துடன் ரூ. 250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 1500 வேலைவாய்ப்புகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
ஓமியம் நிறுவனத்துடன் ரூ. 400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 500 பேருக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
GeakMinds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நோக்கியா நிறுவனத்துடன் ரூ. 450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.