தெலுங்கு நடிகர் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடந்து முடித்துள்ளது. இது தொடர்பான போட்டோஸ் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார் .
நாகர்ஜுனா நிச்சயதார்த்தம்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நாக சைதன்யா. தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான நாகர்ஜுனாவின் மகனான இவரும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோஸ் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சமந்தா
சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 ஆம் ஆண்டு பரஸ்பரம் பிரிந்தனர். அத்துடன் நீதிமன்றம் சென்று விவாகரத்தும் பெற்றார்கள். நாக சைதன்யாவை பிரிந்த உடன் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் சமந்தா.
சோபிதா துலிபாலா
இந்நிலையில் சமந்தாவுடனான பிரிவிற்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக சோஷியல் மீடியாவில் தீயாய் பல தகவல்கள் பரவின. இது சம்பந்தமான போட்டோக்களும் இணைத்ததில் வைரலானது. ஆனால் இருவரும் ரிலேசன்ஷிப்பில் இருப்பதை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மெளனம் காத்தனர்.
மகிழ்ச்சியில் நாகர்ஜுனா
இந்நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு வியாழக்கிழமை இன்று காலை 9.42 மணி அளவில் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான போட்டோக்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா.
குவியும் வாழ்த்துக்கள்
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், ‘என் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தம்பதிகளுக்கு வாழ்த்துகள்’. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நாக சைதன்யா, சோபிதா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சோபிதா துலிபாலா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.