பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் வாலிபால் போட்டியில் இத்தாலி பெண்கள் அணி தங்கம் வென்றது.
பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான வாலிபால் பைனலில் அமெரிக்கா, இத்தாலி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இத்தாலி அணி 3-0 (25-18, 25-20, 25-17) என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக தங்கம் வென்றது. இதற்கு முன், மூன்று முறை (2004, 2008, 2012) காலிறுதி வரை சென்று 5வது இடம் பிடித்திருந்தது. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய அமெரிக்கா வெள்ளி வென்று ஆறுதல் அடைந்தது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரேசில் அணி 3-1 என துருக்கியை வென்றது.