ஜியோவின் அட்டகாசமான பிளான்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்காக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சிறப்பான ப்ரீபெய்ட் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.

Jio
Jio Recharge Plan

இந்தியாவில் மக்கள் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை அடுத்தடுத்து தங்களின் ரீசார்ஜ் சேவைக்கான கட்டணங்களை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து குறைந்த விலையில் சேவை வழங்கும் நெட்வொர்க்குகளுக்கு மாறி வருகின்றனர் வாடிக்கையாளர்கள்.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் விதமாக சில திட்டங்களை வழங்கி ருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. இந்நிறுவனம் இந்தியர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதிலும் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இணையத்தை வழங்கி வருகிறது ஜியோ. தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது ஜியோ. இதில் ரூ.399 கட்டண திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2.5GB வேகமான 4G டேட்டாவுடன், வரம்பற்ற அழைப்புகள், 100 மெசேஜ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

5ஜி சேவையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். அத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா (பிரீமியம் அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் சந்தாக்களும் இந்த திட்டத்தின் மூலமாக பெறலாம். ஜியோவின் மற்றொரு திட்டமாக ரூ.3,599 உள்ளது. வருடாந்திர திட்டமான இது 365 நாட்கள் செல்லுபடியாகும். நீண்ட கால வருடாந்திர திட்டமான இதில் தினந்தோறும் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற 5G ஆகியவை கிடைக்கும்.


மேலும் ரூ.3,999 திட்டத்தில் தினந்தோறும் 2.5 ஜிபி வீதம் 365 நாட்கள் செல்லுபடியாகும். நீண்ட கால வருடாந்திர திட்டமான இதில் வரம்பற்ற 5G சேவை, தினசரி 2.5GB (மொத்தம் 912.5GB), வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எஸ்எஸ் ஆகியவை கிடைக்கும். மேலும் ரூ.3,999 ப்ரீபெய்ட் ஜியோ திட்டத்தில் ஜியோ டிவி சந்தா உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர் பெறலாம்.

ஜியோ மற்றொரு திட்டமாக ரூ.1029 ரீசார்ஜ் பிளான் உள்ளது. 84 நாள் வேலிடிட்டியுடன் இரண்டரை மாதங்களுக்கு தடையற்ற சேவை இத்திட்டத்தின் வாயிலாக கிடைக்கும். தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற கால், 100 மெசேஜ்கள், பிரைம் வீடியோ சந்தா உள்ளிட்டவற்றையும் இந்த ரீசார்ஜ் பிளானில் பயனர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *