சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
உலகம் முழுவதும் ஹிஸ்புத் தஹீரிர் என்ற அமைப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அமைப்புக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆள் சேகரிப்பில் ஈடுபட்டதாக ஆறு நபர்களை உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு யூடியூபில் மூலம் ஆள் சேர்க்கப்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.